குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது
மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை தியாகராயநகர் அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 48). இவருடைய மனைவி சித்ரா (39). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வசித்து வருகிறார்கள்.
சித்ரா தனது மகன், மகளுடன் அசோக்நகர் பிருந்தாவனம் தெருவில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் ஜெயக் குமார் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சித்ராவை பார்க்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவை குத்திவிட்டு, தப்பினார்.
காயமடைந்த சித்ரா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக சித்ரா அளித்த புகாரின் பேரில் அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் நேற்று முன்தினம் இரவே கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story