திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.20 கோடியில் 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருச்சி,
தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழுவினர் நாடு முழுவதும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஆய்வு செய்து விபத்துகளை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த குழுவினர் தாக்கல் செய்து உள்ள அறிக்கையில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் உயிர்ப்பலி வாங்கும் விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை பஸ், வேன், கார்கள் போன்ற பயணிகளின் வாகனங்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்லும் லாரி போன்ற கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன.
10 பேர் பலி
இதனால் இந்த சாலையில் குறிப்பிட்ட 5 இடங்களில் அதிக அளவில் விபத்துகள் நடந்து உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நடந்த விபத்துகளில் 10 பேர் பலியாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் தடுப்பு ஏற்பாடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாகமங்கலம், அளுந்தூர், வளநாடு கைகாட்டி, கல்லாமேடு, சொரியம்பட்டி ஆகிய 5 இடங்களில் சாலையை மறு வடிவமைப்பு செய்தல், நடைபாதைகளை அகலப்படுத்துதல், சென்டர் மீடியன்களை அகலப்படுத்தி நடந்து செல்பவர்கள் ஒதுங்கி நிற்பதற்கான இடத்தை உருவாக்குதல், பாதசாரிகள் சாலையை கடந்து செல்லும் பகுதி என்பதை விளக்குவதற்காக வெள்ளை நிற கோடுகளை இடுதல் (ஜிப்ரா கிராசிங்), தேவையான இடங்களில் சாலையை கடப்பதற்கு புதிய வழித்தடம் உருவாக்குதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.
சுரங்கப்பாதை
இந்த பணிகள் அனைத்தும் ரூ.1½ கோடி திட்ட மதிப்பீட்டில் நடந்து வருவதாகவும், இன்னும் 3 மாத காலத்தில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தவிர திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் கள்ளிக்குடி, மதுரை மாவட்டம் மேலூர் அருகே என்று 2 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையை வாகனங்கள் கடந்து செல்வதற்கு வசதியாக ரூ.20 கோடியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட இருப்பதாகவும் இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story