எந்த சூழ்நிலையிலும் அ.ம.மு.க.வில் இருந்து விலகமாட்டேன் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேட்டி


எந்த சூழ்நிலையிலும் அ.ம.மு.க.வில் இருந்து விலகமாட்டேன் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2019 3:45 AM IST (Updated: 28 Jun 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

‘அ.ம.மு.க.வில் இருந்து எந்த சூழ்நிலையிலும் விலக மாட்டேன்’ என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

தர்மபுரி,

அ.ம.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தி.மு.க.வில் இணையப்போவதாகவும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.ம.மு.க.வில் இருந்து நான் விலகப்போவதாக பரப்பப்படும் தகவல் முழுக்க முழுக்க தவறான, பொய்யான தகவலாகும். அ.ம.மு.க. தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்பவர்கள் இத்தகைய தகவலை பரப்புகிறார்கள். தி.மு.க.வை சார்ந்த சபரீசனோ அல்லது வேறு நிர்வாகிகளோ என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. எந்த சூழ்நிலையிலும் அ.ம.மு.க.வில் இருந்து நான் விலக மாட்டேன்.

விசுவாசம் முக்கியம்

மிகச்சிறந்த தலைமை பண்புகளை கொண்ட தலைவராக தினகரன் உள்ளார். அவரால் தான் இந்த இயக்கத்தை நல்ல முறையில் வழி நடத்த முடியும். தேர்தல்களில் சறுக்கல் ஏற்படுவது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இயல்பானது தான். நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.விற்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது.

அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பதவி சுகத்திற்கு அடிபணியாதவர்கள். அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். நமது கொள்கையில் உறுதியாகவும், தலைமை மீது விசுவாசமாகவும் இருப்பதே முக்கியம். தினகரன் தலைமையில் அ.ம.மு.க.விற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story