போக்குவரத்து கழகங்களை ஒன்றாக இணைக்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் பெங்களூருவில் நடந்தது


போக்குவரத்து கழகங்களை ஒன்றாக இணைக்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் பெங்களூருவில் நடந்தது
x
தினத்தந்தி 28 Jun 2019 3:53 AM IST (Updated: 28 Jun 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து கழகங்களை ஒன்றாக இணைக்க வலியுறுத்தி பெங்களூருவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள 4 போக்குவரத்து கழகங்களை ஒன்றாக இணைக்க வேண்டும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகை கட்டண பஸ் பாசுக்காக போக்குவரத்து கழகங்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டிய ரூ.2,500 கோடியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் முடிவடைந்த பிறகு அந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள், துணை முதல்-மந்திரி பரமேஸ்வரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

ரூ.25 லட்சம் உதவித்தொகை

அந்த மனுவில், “கர்நாடகத்தில் 4 போக்குவரத்து கழகங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இந்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகை கட்டண பஸ் பாசுக்காக மாநில அரசு ரூ.2,500 கோடி போக்குவரத்து கழகங்களுக்கு வழங்க வேண்டும். அந்த பாக்கித்தொகையை அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story