5 சதவீதம் மட்டுமே உள்ளது: தண்ணீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் மாநகராட்சி வேண்டுகோள்


5 சதவீதம் மட்டுமே உள்ளது: தண்ணீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் மாநகராட்சி வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:25 AM IST (Updated: 28 Jun 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

ஏரிகளில் 5 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளதால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் மழைக்காலம் தொடங்கி உள்ளபோதும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் மோதக் சாகர், தான்சா, விகார், துல்சி, வைத்தர்னா, பட்சா ஆகிய ஏரிகளில் 5 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.

இந்தநிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மும்பை மாநகராட்சி பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

சிக்கனம்

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜூலை மாதம் வரை பொது மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து உள்ளது. எனினும் பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஜூலை மாதம் வரை வினியோகம் செய்ய தண்ணீர் இருப்பதால் பொது மக்கள் பீதியடையை வேண்டியதில்லை. வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என உறுதியாக நம்புகிறோம். வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் பேசிய பிறகு குடிநீர் வெட்டு குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

Next Story