திருப்பூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூரில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் கோடங்கிப்பட்டி அருகே சீலப்பட்டியை சேர்ந்த ராஜசேகர் (வயது 26), திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த சிவபாலன் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் ராஜசேகர் மீது திண்டுக்கல், திருப்பூர் வடக்கு, வீரபாண்டி, பூண்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி, திருட்டு, கொள்ளை என 7 வழக்குகள் உள்ளன.
இதுபோல் சிவபாலன் மீது கோவை, அவினாசி, திருப்பூர் ஊரகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி தொடர்பாக 8 வழக்குகளும் உள்ளன. இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் ராஜசேகர், சிவபாலன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை கோவை மத்திய சிறையில் உள்ள 2 பேரிடமும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story