ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான கலந்தாய்வு பலத்த பாதுகாப்புடன் நடந்தது
ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான கலந்தாய்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
புதுச்சேரி,
இதற்காக பொதுப்பிரிவில் தரவரிசையில் 1 முதல் 310 வரை இடங்களை பிடித்த மாணவர்களும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 1 முதல் 60 இடங்களை பிடித்தவர்களும், பழங்குடியினர் பிரிவில் 1 முதல் 23 இடங்களை பிடித்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1 முதல் 130 இடங்களை பிடித்தவர்களும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவில் 1 முதல் 60 இடங்களை பிடித்த மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று காலை இந்த கலந்தாய்வு நடந்தது. முதலில் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதன்பின் மாணவர்களின் கைரேகை சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் ஜிப்மர் கல்லூரியில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள இடங்களை தேர்வு செய்தனர். இதில் புதுவை பிரிவில் 55 மாணவர்களும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவில் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. வருகிற 2-ந் தேதி கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குகின்றன.
இதற்கிடையே புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்று பெற்றோர், மாணவர் சங்கம் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஜிப்மர் இயக்குனரை சந்தித்து புகார் மனு அளித்தனர். மாணவர்களின் இருப்பிடம் குறித்து கலெக்டர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். வெளிமாநிலத்தை சேர்ந்த 13 மாணவ-மாணவிகளின் பெயர்கள் புதுவை இடஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ளது. இதற்காக அவர்கள் போலி குடியிருப்பு சான்றிதழ்கள் பெற்று இருக்கலாம். எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மாணவர் சங்க தலைவர் வை.பாலா கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையொட்டி ஜிப்மர் கலந்தாய்வுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஜிப்மர் வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கலந்தாய்வில் மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு புதுவையில் 150 இடங்களும், காரைக்காலில் 50 இடங்களும் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டிற்கு எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கடந்த 2-ந் தேதி நடந்தது. இதில் நாடு முழுவதும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அதன்பின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த 26-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கும் நேற்று முன்தினம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் கலந்தாய்வு நடந்தது. நேற்று காலை முதல் புதுவை மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடந்தது.
இதற்காக பொதுப்பிரிவில் தரவரிசையில் 1 முதல் 310 வரை இடங்களை பிடித்த மாணவர்களும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 1 முதல் 60 இடங்களை பிடித்தவர்களும், பழங்குடியினர் பிரிவில் 1 முதல் 23 இடங்களை பிடித்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1 முதல் 130 இடங்களை பிடித்தவர்களும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவில் 1 முதல் 60 இடங்களை பிடித்த மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று காலை இந்த கலந்தாய்வு நடந்தது. முதலில் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதன்பின் மாணவர்களின் கைரேகை சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் ஜிப்மர் கல்லூரியில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள இடங்களை தேர்வு செய்தனர். இதில் புதுவை பிரிவில் 55 மாணவர்களும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவில் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. வருகிற 2-ந் தேதி கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குகின்றன.
இதற்கிடையே புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்று பெற்றோர், மாணவர் சங்கம் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஜிப்மர் இயக்குனரை சந்தித்து புகார் மனு அளித்தனர். மாணவர்களின் இருப்பிடம் குறித்து கலெக்டர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். வெளிமாநிலத்தை சேர்ந்த 13 மாணவ-மாணவிகளின் பெயர்கள் புதுவை இடஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ளது. இதற்காக அவர்கள் போலி குடியிருப்பு சான்றிதழ்கள் பெற்று இருக்கலாம். எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மாணவர் சங்க தலைவர் வை.பாலா கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையொட்டி ஜிப்மர் கலந்தாய்வுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஜிப்மர் வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கலந்தாய்வில் மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story