காசநோய் குறித்து விழிப்புணர்வு வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
காசநோய் குறித்து விழிப்புணர்வு வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பேசினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட காசநோய் பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து காவலர்களுக்கான காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் வேலூர் காவலர் மன்றத்தில் நேற்று நடத்தியது. மாவட்ட மருத்துவ பணிகள் (காசநோய் பிரிவு) துைண இயக்குனர் பிரகாஷ்அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காசநோய் தொடர்பாக அறிகுறி தென்பட்டால் நாம் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கவனக்குறைவாக இருத்தல் கூடாது. ஏனென்றால் இந்த நோய் பரவக்கூடியதாகும். நம்முடன் பணியாற்றுபவரை இந்நோய் தாக்கினால் நமக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். முன் எச்சரிக்ைக நடவடிக்கை தேவை.
இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே நோய் அறிகுறியை அறிந்தால் குணப்படுத்த முடியும். முற்றிலும் பரவிய பிறகு குணப்படுத்துவது என்பது கடினமாகும். குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கூட இந்நோய் பரவுகிறது. நாம் பணிசெய்யும் சூழலில் இந்நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே நமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் காசநோய் குறித்து டாக்டர் பிரிசில்லா விளக்கி கூறினார். அதைத்தொடர்ந்து காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story