மாவட்ட செய்திகள்

தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல் + "||" + Amur village executive officer threatens suicide

தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல்

தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல்
தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல்.
முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவுக்கு உட்பட்டது ஆமூர் வருவாய் கிராமம். இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக கண்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் பணிக்கு சரியாக வரவில்லை என்று புகார் எழுந்ததை தொடர்ந்து, அவரை முசிறி தாசில்தார் சுப்பிரமணியன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன், நேற்று முசிறி தாலுகா அலுவலகத்துக்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்தார். அப்போது, தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு இருந்தவர்களிடம் கிராமநிர்வாக அதிகாரி கண்ணன் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள் அவர் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது
தற்கொலை செய்துகொண்ட தறிப்பட்டறை உரிமையாளர் ஒருவர் “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்”, என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
2. பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்காக அஜித்பவார் மிரட்டப்பட்டார் - சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி
ஆட்சி அமைப்பதற்காக பாரதீய ஜனதாவுடன் சேருவதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் மிரட்டப்பட்டார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
3. போலீஸ் அதிகாரியை மிரட்டிய உத்தரபிரதேச பெண் மந்திரி - விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவு
போலீஸ் அதிகாரிக்கு உத்தரபிரதேச பெண் மந்திரி ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
4. தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வருடன் சந்திப்பு
தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வரை சந்தித்தார். அந்த சந்திப்பில் நேர்மையான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார்.
5. தொழிலதிபரை மிரட்டி ரூ.5 கோடி பறித்த சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு
தொழிலதிபரை மிரட்டி ரூ.5 கோடி பறித்த சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.