சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவைக்கு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் உள்ளூர் பொதுமக்களும் தங்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சென்னை, பெங்களூர் மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதிகளில் இருந்து பலர் மோட்டார்சைக்கிள் மூலம் புதுச்சேரிக்கு வருகின்றனர். அந்த மோட்டார்சைக்கிளிலேயே கடற்கரையில் வலம் வருவதை அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
எந்த நாளாக இருந்தாலும் பகல் நேரங்களில் கடற்கரை சாலையில் வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனால். மாலை 4 மணிக்கு மேல் பொதுமக்கள் நலன்கருதி கடற்கரை சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் புதுவை போக்குவரத்து போலீசார் கடற்கரை சாலையில் நேற்று பகல் வேளையிலும் 2 சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனத்தையும் கடற்கரை சாலையில் அனுமதிக்கவில்லை. ஆங்காங்கே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவிப்பு பலகைகளையும் அமைத்துள்ளனர். மற்ற நாட்களில் மாலை 4 மணிமுதல் மறுநாள் காலை 9 மணிவரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
புதுவை போக்குவரத்து போலீசாரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பகல் வேளையில் கடற்கரை சாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடற்கரையில் நிழல் என்பதே அரிதாக உள்ளது.
எனவே பகல் வேளையில் கடற்கரை சாலையில் வாகனங்களின் போக்குவரத்து என்பது குறைவாகத்தான் இருக்கும். வாகனங்களை எங்கோ நிறுத்திவிட்டு நீண்ட தூரம் நடந்து செல்வது என்பது இயலாத காரியமாக உள்ளது. ஏனெனில் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடக்கின்றன. அதன்பின் பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் மதிய உணவு ஊட்ட கடற்கரைக்கே வருகின்றனர்.
அவர்கள் சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொளுத்தும் வெயிலில் எவ்வளவு தூரம்தான் செல்ல முடியும்? பெரிய அளவில் ஆட்களே வராத கடற்கரை சாலையை பகல் நேரத்தில் ஏன் அடைத்து வைத்திருக்க வேண்டும்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வழக்கம்போல் மாலை நேரங்களில் கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்லாமல் அடைத்துவிட்டு காலை வேளைகளில் வாகனங்களை அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அலைக்கழிப்பதை தவிர்க்கலாம்.

Related Tags :
Next Story