கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்


கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:00 AM IST (Updated: 30 Jun 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

தளவாய்புரம் அருகே கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தளவாய்புரம்,

தளவாய்புரம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவில் மிகவும் பழமையானது. தற்போது இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு பெரிய தெப்பக்குளம் ஒன்று உள்ளது.

இந்த தெப்பக்குளத்தின் ஓரத்தில் செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது. இ‌ந்த செடிகளில் உள்ள வேர்களால் சுற்றுச்சுவர் உடைந்து தெப்பக்குளம் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது.

இங்கு மாசி மக தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பாக நடப்பது வழக்கம். ஆனால் இந்த திருவிழா கடந்த 10 ஆண்டுகளாக இங்கு நடைபெறவில்லை.

வேண்டுகோள்

எனவே, மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு விரைவில் தேவதானம் கோவில் முன்பு உள்ள தெப்பக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story