ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டம் வரவேற்கத்தக்கது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி
ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டம் வரவேற்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.
தஞ்சாவூர்,
புதிய கல்விக்கொள்கை குறித்து மக்கள் கருத்துக்களை பதிவு செய்ய 1 மாத காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை 6 மாதமாக நீட்டிக்க வேண்டும். கல்வி சீர்திருத்தம் தமிழகத்தில் தேவை. நாட்டின் வரலாறு, பண்பாடு, சிறப்பு, ஒழுக்கம் போன்றவை போதிக்கப்பட வேண்டும்.
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தாய்மொழியில் இருக்க வேண்டும். மழலை, ஆரம்பக்கல்வி வரை தாய்மொழி கட்டாயம். 5-ம் வகுப்புக்கு மேல் தமிழ், ஆங்கிலம் மற்றும் மக்கள் விரும்புகின்ற ஏதாவது ஒரு மொழி என மும்மொழி கல்வித்திட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் சாரணர் அமைப்பு, ரெட்கிராஸ் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். தேசிய மாணவர் படை அமைப்பை வலிமைப்படுத்த வேண்டும்.
ஜோதிடத்தை போதிக்கவேண்டும்
கல்வித்துறையில் சீர்திருத்தம் குறித்து எங்கள் பரிந்துரைகளை பதிவு செய்ய உள்ளோம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது. இதை அனைத்து பல்கலைக்கழகத்திலும் போதிக்க வேண்டும். அரசு இதனை அங்கீகரிக்க வேண்டும்.
இந்தியா ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டம் வரவேற்கத்தக்கது. இது மிகவும் பயனுள்ளது. ஒரு சிலர் வேண்டுமானால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். அது தவறானது. தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது வளர்ச்சிக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு, ஒருமைப்பாட்டுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ்போன்ஸ்லே மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story