மாவட்ட செய்திகள்

குத்தாலம் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது கார் பறிமுதல் + "||" + Two suspects arrested for kidnapping liquor near a canal

குத்தாலம் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது கார் பறிமுதல்

குத்தாலம் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது கார் பறிமுதல்
குத்தாலம் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.
குத்தாலம்,

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி மெயின் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணாநகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (வயது 32) என்பதும், மற்றொருவர் மயிலாடுதுறை பேச்சாவடி அருணாநகரை சேர்ந்த ராஜூ மகன் பாபு (25) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து பந்தநல்லூர் பகுதிக்கு சாராயம் கடத்தி சென்றது தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், பாபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில், சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் பிரபல ரவுடி, போக்சோ சட்டத்தில் கைது
கோவையில் சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் பிரபல ரவுடி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் தப்பி ஓடும்போது கால் முறிந்ததால் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2. சமயபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
சமயபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. நாகர்கோவில் பஸ் நிலையத்தில் சிறுமியை கடத்திய பெண் கைது பரபரப்பு தகவல்கள்
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் சிறுமியை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
4. சிலை கடத்தல் வழக்கில், சென்னையில் கைதான பெண் தொழில் அதிபரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
சிலை கடத்தல் வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட பெண் தொழிலதிபரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
5. குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.