தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்தது


தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 1 July 2019 3:30 AM IST (Updated: 1 July 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி உழவர் சந்தையில் வறட்சி காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்தது.

தர்மபுரி, 

தர்மபுரி உழவர் சந்தைக்கு தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வருகின்றனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் தண்ணீர் இன்றி பெரும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிராமத்தில் விளையும் காய்கறிகளான கத்திரிக்காய், தக்காளி, பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் மற்றும் கீரை வகைகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

இருப்பினும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளை கிழங்கு போன்ற காய்கறிகள் வரத்து வழக்கம்போல் இருந்தாலும் விலையும் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

Next Story