புள்ளியியல் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் அறிவுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக மாதிரி ஆய்வுகள் நடத்தப்பட்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக மாதிரி ஆய்வுகள் நடத்தப்பட்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 2019-ம் ஆண்டுக்கான தேசிய மாதிரி ஆய்வில், கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள குடும்பங்களின் நுகர்வு செலவு, வருவாய், வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பின்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. எனவே மக்களுக்கு தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்புப்பணிகளை மேற்கொள்ள, தங்கள் வீடுகளுக்கு வரும் தேசிய புள்ளியியல் அலுவலகம், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த களப்பணியாளர்களிடம், அவர்கள் கோரும் விவரங்களை பொதுமக்கள் தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story