தொகுதி மக்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன் செயற்குழு கூட்டத்தில் செந்தில்பாலாஜி பேச்சு
அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன் என செயற்குழு கூட்டத்தில் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. கூறினார்.
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் மணியன் தலைமை தாங்கினார். க. பரமத்தி ஒன்றிய செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். அரவக்குறிச்சி நகர செயலாளர் அண்ணாதுரை வரவேற்று பேசினார்.
கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளிடம் ஆங்காங்கே நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி வேண்டுதல், சாக்கடை வசதி வேண்டுதல் உள்ளிட்டகோரிக்கை மனுக்களை பெற்றனர். தொடர்ந்து செந்தில்பாலாஜி பேசுகையில், அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அந்தவகையில் தொகுதி மக்கள் எந்த குறையாக இருந்தாலும் என்னிடம் கூறலாம். தொகுதி மக்கள் என்னை வேலை வாங்குங்கள். உங்களுக்காக உழைத்திட காத்திருக்கிறேன் என்றார்.
இதில் மாநில சிறுபான்மையினர் உரிமை பிரிவு துணை செயலாளர் முனவர்ஜான், முன்னாள் பேரூராட்சி தலைவர் மணிகண்டன், கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகுமார், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டன். முடிவில் பள்ளப்பட்டி நகர செயலாளர் தோட்டம் பஷீர் அகமது நன்றி கூறினார்.

Related Tags :
Next Story