மும்பையில் சி.என்.ஜி., சமையல் கியாஸ் விலை உயர்வு இன்று முதல் அமல்
மும்பையில் சி.என்.ஜி., சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது.
மும்பை,
மும்பையில் வீடுகளுக்கு குழாய் மூலம் மாநில அரசின் மகாநகர் நிறுவனம் சமையல் கியாசை வினியோகித்து வருகிறது. இதற்கான கட்டணம் யூனிட் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில் குழாய் மூலம் வீடு களுக்கு வினியோகிக்கும் சமையல் கியாசின் விலையை மகாநகர் நிறுவனம் அதிகரித்து உள்ளது.
இதில் ஒரு யூனிட் சமையல் கியாஸ் விலை ரூ.31.53-ல் இருந்து ரூ.31.79 ஆக அதிகரித்து உள்ளது. மானியம் வேண்டாம் என விட்டு கொடுத்தவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்த கியாஸ் விலை யூனிட்டுக்கு ரூ.37.13-ல் இருந்து ரூ.37.39 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல வாகனங்களுக்கு நிரப்பப்படும் கியாசின் (சி.என்.ஜி.) விலை கிலோவுக்கு ரூ.51.57-ல் இருந்து ரூ.51.99 ஆக அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வுக்கு டாக்சி டிரைவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
எனினும் இந்த கியாஸ் விலை உயர்வு பெரிய அளவில் டாக்சி, ஆட்டோ டிரைவர்களை பாதிக்காது என மகாநகர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். சமையல் கியாஸ் (பி.என்.ஜி.) மற்றும் வாகனங்களுக்கான கியாஸ் (சி.என்.ஜி.) விலை உயர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
Related Tags :
Next Story