மும்பையில் 3-வது நாளாக கனமழை மாநகராட்சி ஊழியர் குடியிருப்பில் சிலாப் இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு
மும்பையில் நேற்று 3-வது நாளாக கனமழை பெய்தது. சயான் கோலிவாடாவில் மாநகராட்சி ஊழியர் குடியிருப்பு கட்டிடத்தின் சிலாப் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது. எனினும் தற்போது தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பையில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் கனமழை கொட்டி தீர்த்தது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் ஜூன் மாதம் சராசரியாக பெய்ய வேண்டிய மழைப்பொழிவில் இந்த 2 நாளில் 97 சதவீதம் பெய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், 3-வது நாளாக நேற்றும் மும்பையில் கனமழை பெய்தது. தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளும் நல்ல மழைப்பொழிவை பெற்று உள்ளன. தற்போது, ஏரிகளில் வெறும் 5 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், ெதாடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை சாந்தாகுருசில் 515 மி.மீட்டரும், கொலபாவில் 341.1 மி.மீட்டரும் மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மும்பையில் நேற்று மழை பெய்து கொண்டிருந்த போது, அதிகாலை 5.30 மணியளவில் சயான் கோலிவாடாவில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு கட்டிடத்தின் சிலாப் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வருபவர்கள் அயர்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
இதன் காரணமாக குடியிருப்புவாசிகள் உயிர் தப்பினர். காலை நேரத்தில் விழுந்து இருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்கும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story