விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை - தாசில்தார் தகவல்
திருவாடானை தாலுகாவில் விவசாயிகளுக்கு கவுரவ ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் பாரத பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு கவுரவ ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் சேகர் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் சேதுராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் திருவாடானை தாலுகாவில் 2015-16-ம் ஆண்டில் வேளாண்மை கணக்கின்படி 44,599 சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெரு விவசாயிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக திருவாடானை தாலுகாவில் 12,084 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு உத்தரவிட்டதின் அடிப்படையில் தற்போது 2-வது கட்டமாக கணக்கெடுக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி கூடுதலான விவசாயிகளை இத்திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து தாசில்தார் சேகர் கூறியதாவது:-
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நேரடிபட்டாதாரர்களுக்கு உடனடியாகவும், பட்டாதாரர்கள் இறந்துவிட்டால் விசாரணையின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறுவதற்கு பரிந்துரைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story