திருவாடானை அருகே, குழந்தையுடன் பரிதவித்த வடமாநில பெண்
திருவாடானை அருகே குழந்தையுடன் பரிதவித்த வடமாநில பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரதிநகரில் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெண் குழந்தையுடன் செய்வதறியாது பரிதவித்த நிலையில் நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து திருவாடானை தனிப்பிரிவு போலீஸ்காரர் சதீஸ் 1098-க்கு தகவல் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கு வந்த தேவிபட்டினம் சைல்டு லைன் துணை மைய இயக்குனர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் 2 பேரையும் ராமநாதபுரம் அழைத்து சென்று மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.
அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பால்காட் பைகர் பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் ஜாங்கிரால் என்பவரின் மனைவி சீத்தாபாய் (வயது25) என்பதும், இவர்களது குழந்தை மாமுனி என்பதும் தெரியவந்தது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சீத்தாபாய் கோபம் கொண்டு தனது குழந்தையுடன் கொல்கத்தாவில் இருந்து ரெயிலில் ஏறி தேவகோட்டை ரஸ்தாவில் வந்து இறங்கியுள்ளார். பின்பு அங்கிருந்து திருவாடானை பகுதிக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து தாயும், மகளும் ராமநாதபுரம் அன்னை சத்யா காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story