சிவகங்கை மின்பகிர்மான அலுவலகத்தில், கணினி மயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மின்பகிர்மான அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ்நாடு மின்பகிர்மான அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் தொடக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மின்தடை நீக்கும் மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து கூறியதாவது:-மாவட்டத்தில் ரூ.10.80 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் மூலம் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மின்இணைப்பில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய தொலைபேசி எண்-1912 மற்றும் 1800, 5996, 1912 என்ற கட்டணமில்லாத எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். வெளிமாவட்டங்களிலிருந்து புகார்கள் தெரிவிக்க விரும்பினால் தொலைபேசியில் கோடு எண்-04575-1912 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
மின்பயன்பாட்டிலுள்ள இணைப்புகள் எங்கேனும் பழுது ஏற்பட்டாலும் அல்லது வீடு, கடை, நிறுவனங்கள் போன்றவற்றில் மின் இணைப்பு தொடா்பான பழுதுகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு புகாரும் கணினியின் மூலம் பதிவு செய்யப்பட்டு புகார் தெரிவித்தவா்களுக்கு அதற்குரிய பதிவு எண் தெரிவிக்கப்படும். பழுது சரிசெய்த பின் மீண்டும் அதே புகாருக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பதிவு மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாகராஜன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மின் பகிர்மான கழக மதுரை மண்டல தலைமைப் பொறியாளா் கோல்ட்வின் வில்லியம்ஸ், மேற்பார்வை பொறியாளர் .சின்னையன், அண்ணா தொழிற்சங்கதிட்ட செயலாளா் ஜெயக்குமார் செயற் பொறியாளர்கள் முருகையன், வீரமணி, ஜான்சன், வெங்கட்ராமன், முத்தழகு மற்றும் மின்வாரிய உதவிப்பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story