அகில இந்திய அளவில் ஆதார் சேவையில் தொடர்ந்து திருச்சி தபால் துறை முதலிடம் மத்திய மண்டல இயக்குனர் தகவல்
அகில இந்திய அளவில் ஆதார் சேவையில் தொடர்ந்து திருச்சி தபால் துறை முதலிடம் வகிப்பதாக மத்திய மண்டல தபால் துறை இயக்குனர் தெரிவித்தார்.
திருச்சி,
நாட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் முடிவடைந்து 5-ம் ஆண்டு தொடங்கி உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தபால் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் 5-ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடந்தது.
திருச்சி மத்திய மண்டல தபால் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் பேசுகையில், “தபால் துறையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பல சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தபால் துறை முற்றிலும் நவீனமயமாகி வருகிறது. தபால் மட்டுமல்லாமல் வங்கி சேவை, ஏ.டி.எம். வசதி, செல்போன் செயலி முறை, பாஸ்போர்ட் சேவை மையம் உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் தினமும் பணி நேரத்தை இரவு 9 மணி வரை கூட நீட்டித்துள்ளோம். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட காலை 10 மணி முதல் மாலை 4 வரை செயல்படுகிறது. அகில இந்திய அளவில் ஆதார் சேவையில் திருச்சி தலைமை தபால் நிலையம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இது திருச்சிக்கு கிடைத்த பெருமை” என்றார்.
திருச்சி மத்திய மண்டல தபால் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் பேசுகையில், “நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் தபால் துறையில் தபால்காரர்கள் பணி குறைந்து கொண்டே வந்தது. ஆனாலும் அதற்கேற்ப டிஜிட்டல் சேவையில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டன. இ-தபால் வங்கியில் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று பணம் வினியோகிக்க கூடிய வசதி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.
விழாவில் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு முதிர்வு தொகை ஆணை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தையும் சுமதி ரவிச்சந்திரன் வழங்கினார். முதுநிலை தபால் துறை கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், உதவி இயக்குனர் மைக்கேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story