காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் பைபாஸ் சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் பைபாஸ் சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 1 July 2019 10:30 PM GMT (Updated: 1 July 2019 5:52 PM GMT)

காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் பைபாஸ் சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ஆசியா மரியத்திடம் பைபாஸ் சாலை அமைக்க நிலம் எடுப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

மோகனூரில் இருந்து ராசிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பைபாஸ் சாலை அமைக்க, காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி மயானத்திற்கு கிழக்கு புதூர் மேடு வழியாக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இணைக்க ஏற்கனவே அளவு எடுக்கப்பட்டது.

தற்போது அதை மாற்றி காளப்பநாயக்கன் பட்டி மயானத்திற்கும், மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் லட்சுமிநகர் வழியாக சாலை அமைக்க அளவீடு செய்வதாக அறிகிறோம். அந்த பகுதியில் 130 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம்.

லட்சுமிநகர் வழியாக சாலை அமைக்கும் பட்சத்தில் நாங்கள் வீடுகளை இழக்க நேரிடும். அதுபோன்ற சூழ்நிலை உருவானால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே ஏற்கனவே நிலத்தை அளவீடு செய்தபடி புதூர்மேடு வழியாக சாலை அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story