விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவர்கள் மனு
விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகையில் உள்ள தேசிய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்தோம். தற்போது கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறோம். இந்த நிலையில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தற்போது படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 2017-18-ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீட்டுமனை பட்டா
இதேபோல வேதாரண்யம் தாலுகா காடந்தேத்தி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது அந்த இடம் குளத்து புறம்போக்கு என்று வருவாய்த்துறை மூலம் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் வசிக்கும் இடம் நீர்நிலைகளுக்கு எந்த வகையிலும் இடையூறுகள் கிடையாது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து மீண்டும் குடிசைகள் அமைத்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனவே, எங்கள் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தாமல் மனுவை பரிசீலனை செய்து நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு வருவாய்த்துறை மூலம் மனையை மாற்றம் செய்து, தமிழக அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story