பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடம் முடிவடையும் நிலையில் கட்டுமான பணிகள்


பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடம் முடிவடையும் நிலையில் கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர் ரெயிலடி கூட்டுறவு காலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடம் 1961-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். முதலில் ஓட்டு கூரையுடன் கட்டிடம் இருந்தது. பின்னர் ஓடுகள் அகற்றப்பட்டு கான்கிரீட் மேல்தளம் அமைக்கப் பட்டது.

இங்கு இடப்பற்றாக்குறையால் ஊழியர்கள் மற்றும் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி வடக்கு பூதலூரில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்தின் அருகே ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

முடிவடையும் நிலையில்...

இதற்கான கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் தொடங்கின. தற்போது கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

அலுவலகத்தின் தரை தளத்தில் ஒன்றிய கூட்ட அரங்கு, முதல் தளத்தில் பணியாளர்களுக்கான பயிற்சி கூட்ட அரங்கு, ஒன்றிய ஆணையர்கள், ஒன்றியக்குழு தலைவர் அறைகள், ஒன்றிய பொறியியல் பிரிவு, கணினி பிரிவு உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. இன்னும் 3 வாரங்களில் ஒன்றிய அலுவலக கட்டிடம் முழுமையாக தயாராகி விடும் என அதிகாரிகள் கூறினர்.

Next Story