உத்தமசோழபுரத்தில் 2 பெண்கள் தற்கொலை


உத்தமசோழபுரத்தில் 2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 2 July 2019 3:00 AM IST (Updated: 2 July 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

உத்தமசோழபுரத்தில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கொண்டலாம்பட்டி, 

சேலம் உத்தமசோழபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி(வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த செல்வி நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்விக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தி வருகின்றார்.

சங்ககிரி காளிகவுண்டர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி தெய்வநாயகி(23). இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கடந்த 2 மாதங்களாக சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை தெய்வநாயகி தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தெய்வநாயகி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே தெய்வநாயகிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், அவருடைய தற்கொலை குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story