குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.
குடிநீர் பிரச்சினை
கடவூர் தாலுகா டி.இடையப்பட்டி அருகேயுள்ள எழுவக் கரியூர் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஊர் முக்கியஸ்தர் தங்கராஜ் கவுண்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்தமனுவில், எங்கள் ஊரில் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக காவிரிக்குடிநீர் எங்கள் ஊருக்கு சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. ஊரிலுள்ள ஆழ்துளை கிணறுகளும் வற்றி விட்டதால், நாங்கள் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் தேடி பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தற்சமயத்திற்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலைநீர்தேக்க தொட்டியில் சேகரித்து வைத்து எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும். மேலும் காவிரிக்குடிநீர் சீராக வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் விவசாயிகள் வேலையின்றி தவிக்கின்றனர். எனவே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
சேதமடைந்த நீர்த்தேக்கதொட்டிகள்
கிருஷ்ணராயபுரம் வட்டம் பெரியசேங்கல் ஆதிதிராவிடர் காலனிதெரு மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் காவிரிக்குடிநீர் தட்டுப்பாடின்றி வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சேதமடைந்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்கதொட்டிகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பூவம்பட்டி செல்லும் வழியிலுள்ள சக்கிலியர் தெருவில் புதிதாக சாலை வசதி, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வெள்ளியணை தென்பாகம் நடுமேட்டுபட்டியை சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் அப்புசாமி உள்ளிட்டோர் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வெள்ளியணை பெரியகுளத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை நீரேற்றம் செய்து ஊரிலுள்ள மேல்நிலைநீர்தேக்க தொட்டியில் சேகரித்து வினியோகிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படுமா?
திருமாநிலையூர் சுங்ககேட் காவேரி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் காவேரி நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டே செல்ல வேண்டியுள்ளது. எனவே கழிவுநீரை சீராக வெளியேற்றும் வகையில் புதிதாக சாக்கடை கட்டி வடிகால் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் புதிதாக தார் சாலை அங்கு அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூடுதல் ஆசிரியர்கள்
குளித்தலை ஒன்றியம் அய்யர்மலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில், அய்யர்மலையில் கடந்த 2012-ல் நூற்றாண்டு விழா கண்ட சிவாயம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது அரசின் புதிய திட்டப்படி எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளிலும் 60 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் ஒரு ஆசிரியர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் குழந்தைகளை பராமரிப்பதில் கடினமான சூழல் உள்ளது. தற்போது ஆசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளதால், எங்களது பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை பணிக்காக நியமிக்க வேண்டும். இல்லையெனில் பெற்றோர், மாணவர்களை திரட்டி அறவழி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
புகளூர் வட்டம் மறவாபாளையம் மகாத்மா காந்தி நகர், மதுரைவீரன் நகர், நாடார்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அரவக்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் எங்கள் ஊரையொட்டிய காவிரியாற்று பகுதியில் கிணறு அமைத்து அதிலிருந்து நீரேற்றம் செய்து மேல்நிலைநீர்தேக்க தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த இணைப்பை துண்டித்து விட்டு சாயக்கழிவுநீர் கலக்கும் கிணற்றிலிருந்து குடிநீர் தரும் ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்கிறது. இதனை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு
கூட்டத்தின்போது, தேசிய அளவில் இந்திய டென்னிஸ் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட போட்டியில் 12 மற்றும் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தங்கம் வென்ற மாணவர் ரித்தின் பிரனவ்்், சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுடெல்லியில் நடைபெற்ற யோகா ஒலிம்பிக்போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்திற்காக தங்கம் பெற்ற மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளி மாணவன் ஜானார்த்தனன், மற்றும் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபர்னாஸ்ரீ, மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று தேசிய அளவில் கலந்து கொல்லும் தருன், கிருஷ்ணன், சுரேஷ், ஸ்ரீசாந்த், பிரசாந்த், யுகேஷ், ஹரிஸ்குமார் ஆகியோரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் அழைத்து வாழ்த்து கூறி பாராட்டினார். மேலும் பயனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, மாவட்்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ், மாற்றுதிறனாளிநல அதிகாரி ஜான்சி, மாவட்ட ஆதி திராவிடர்நல அதிகாரி லீலாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story