ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகளிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் மணியரசன் பேச்சு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகளிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.
திருக்காட்டுப்பள்ளி,
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் பங்கீடு ஒழுங்காற்று குழுவுக்கு முழுமையான அதிகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை மாவட்டம் பூதலூரில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், சமவெளி விவசாயிகள் பாதுகாப்பு இயக்க தலைவர் பழனிராஜன், தி.மு.க. நிர்வாகி பன்னீர்செல்வம், இந்திய ஜனநாயக கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் திருமாறன், நாம் தமிழர் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் அற்புதராசு, அ.ம.மு.க. நிர்வாகி புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகள் சார்ந்த பிரச்சினைகள் மீது அக்கறை இல்லாத நிலை காணப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டின் உரிய வழிகாட்டுதல்களின்படி அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் பங்கீடு ஒழுங்காற்று குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. தனது உத்தரவை கர்நாடகம் மதிக்காவிட்டால் அந்த மாநிலத்தில் உள்ள அணைகளை தன் கைவசப் படுத்தும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இல்லை. இதுபோன்ற அதிகாரங்கள் அனைத்தையும் கொண்ட ஆணையம் அமைய வேண்டும்.
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் மரக்காணம் தொடங்கி ராமேசுவரம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது தமிழக பகுதிகளை பாலைவனமாக்கும் திட்டம். அதனால்தான் எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திரபிரதான், ஹைட்ரோ கார்பன் குறித்து விவாதிக்க தயார் என்று பதில் அளித்துள்ளார்.
விவாதம், கருத்து கேட்பு என்பதெல்லாம் வேண்டாம். மரக்காணம் தொடங்கி ராமேசுவரம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதா? வேண்டாமா? என விவசாயிகளிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டங்கள் நடை பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story