குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது
குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாங்கண்ணி,
குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகராஜன், கண்ணையன், விவசாய தொழிற் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் தட்டுபாடின்றி வழங்க வேண்டும். குறுவை சாகுபடி பொய்த்துபோன நிலையில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். மழைநீர் சேமிக்கும் வகையில் குளங்களை தூர்வார வேண்டும். கீழையூர் ஒன்றியத்தில் உள்ள ஆறு, வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் செல்லையன், செயலாளர் சீனிவாசன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலாஜி, மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, பாஸ்கர், சந்தானகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சம்பந்தம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரும் திருமருகல் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த 39 ஊராட்சிகள் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்க கோரி கோஷம் எழுப்பினர்.
கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Related Tags :
Next Story