குடிமராமத்து திட்டத்தின் கீழ் 66 பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டிற்கான குடிமராமத்து திட்டத்தின் கீழ் 66 பணிகள் ரூ.20 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழக அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்டம் மூலம் 59 பணிகள் ரூ.17 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கல்லணை கால்வாய் கோட்டம் மூலம் 7 பணிகள் ரூ.2 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 5 பணிகள் ரூ.1 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 8 பணிகள் ரூ.2 கோடியே 71 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 19 பணிகள் ரூ.7 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டிலும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 11 பணிகள் ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டிலும், திருமயம் சட்டமன்ற தொகுதியில் 15 பணிகள் ரூ.4 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 8 பணிகள் ரூ.2 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கண்மாய்கள், அணைக்கட்டுகள், வரத்துவாய்க்கால்களை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை புதுப்பித்தல், அடைப்பு பலகைகளை புதுப்பித்தல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும். இந்த பணிகள் அந்தந்த கண்மாய் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட பாசனத் தாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. பணிகளை மேற்கொள்ளப்பட இருக்கும் சங்கங்களில் பாசனத்தாரர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும், இந்த பணிகள் தரமானதாகவும், மழைக்காலத்திற்கு முன்பாகவும் முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாசனத்தாரர் சங்கங்கள் குடிமராமத்து திட்டம் குறித்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ள பணிகளின் விவரங்களை நீர்வள ஆதாரத்துறையில் இருந்து பெற்று, குடிமராமத்து பணிகளில் பங்கேற்கலாம். இதுகுறித்து மேலும் விவரம் அறிய உதவி பொறியாளர் பாசனப் பிரிவு அறந்தாங்கி 9443924266 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story