நிலுவை மனுக்கள் மீது தீர்வு காணாவிட்டால் ‘நிலஅளவை பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும்’ கலெக்டர் எச்சரிக்கை
நிலுவை மனுக்கள் மீது தீர்வுகாணாவிட்டால் நில அளவை பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும் என்று கலெக்டர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது 11 தாலுகா அலுவலகத்திற்குட்பட்ட நில அளவை துறையில் அதிகமான மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கலெக்டர், இவ்வளவு மனுக்கள் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு சரியான பதில் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படவில்லை. பின்னர் கூட்டத்தில் கலெக்டர் சிவராசு பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது தாசில்தார்கள் உடனடியாக பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். நில அளவை துறையில் மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் நிலஅளவை தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக 6 மாதத்திற்கு முன்பாக கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நிலஅளவை துறையினர் உரிய கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மருங்காபுரி ஆகிய வட்டங்களில் நிலஅளவை தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. நிலஅளவை துறையில் உள்ள 20 ஆயிரம் மனுக்கள் மீது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் உரிய தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு காணவில்லையென்றால் நிலஅளவை பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ஒருமாத காலத்திற்குள் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும். பட்டா மாற்றம் வேண்டி ஆன்லைனில் வரப்பெற்ற மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்.
திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்.சி, எஸ்.டி சான்றிதழ் வேண்டி அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளது. இந்த மனுக்கள் மீது வருவாய் கோட்டாட்சியர் தனிக் கவனம் செலுத்தி உரிய தீர்வு காண வேண்டும். மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடன் சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story