பிளாஸ்டிக் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு உரிமையாளர்கள் மீது வழக்கு
வெள்ளிச்சந்தை அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் தொழிலாளர்கள் 5 பேரை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜாக்கமங்கலம்,
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே சேனாப்பள்ளியில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இதை வில்லுக்குறி வடக்கு நுள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த அருள்சாமி மகன்கள் பில்சன் (வயது 32) மற்றும் ரதீஷ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இங்கு வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்குவதாக வெள்ளிச்சந்தை போலீசாருக்கு புகார்கள் சென்றனர்.
காப்பகத்தில் ஒப்படைப்பு
இதையடுத்து போலீசார் தொழிற்சாலையில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 7 முதல் 18 வயதுக்கு உள்பட்ட 5 குழந்தை தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்கியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் மீட்டனர். மேலும், அங்கு வேலை செய்த வெளிமாநிலத்தை சேர்ந்த பப்பு (39), ராஜ்குமார் (19), ஹரிராம் (33), முக்கேஷ் கசாப் (21) ஆகியோருக்கு போதிய சம்பளம் கொடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் மீட்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் நெல்லையில் உள்ள இளஞ்சிறார்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக கம்பெனி உரிமையாளர்கள் பில்சன், ரதீஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story