நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள் - போலீசார் விசாரணை
சேலத்தில் நடுரோட்டில் கேக் வெட்டி வாலிபர்கள் பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடிகள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.
இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீசஸ் உள்பட 5க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர். இதற்கிடையில், சேலம் மாநகரில் சில இடங்களில் இரவு நேரங்களில் சிலர் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சேலம் கடைவீதியில் நடுரோட்டில் சில வாலிபர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கொண்டாட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறும் போது, ‘சேலம் கடைவீதியில் நள்ளிரவில் சில வாலிபர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடியதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். ஆனால் அதில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றார்.

Related Tags :
Next Story