சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 July 2019 10:17 PM GMT (Updated: 2 July 2019 10:17 PM GMT)

சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் மாதேஸ்வராநகரை சேர்ந்தவர் தீனதயாளன் என்கிற தினே‌‌ஷ்குமார் (வயது 25). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்தார். இந்நிலையில் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். தொடர்ந்து அந்த பெண்ணை அவருடைய பெற்றோர் தீனதயாளனிடம் இருந்து அவரை பிரித்து தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதனால் மனமுடைந்த அவர் வி‌‌ஷம்குடித்தார். தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக பலியானார்.

இந்நிலையில் தீனதயாளனை அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் அடித்து உதைத்து, அவரது வாயில் வி‌‌ஷத்தை ஊற்றி கொலை செய்ததாகவும், இந்த சாவில் மர்மம் இருப்பதாகவும் எனவே இதனை பல்லடம் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்ற வேண்டும்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, தீனதயாளனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். தொடர்ந்து உடலை பெற்றுச்சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story