சிதம்பரம், திட்டக்குடி, புவனகிரியில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம், திட்டக்குடி, புவனகிரியில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2019 4:30 AM IST (Updated: 3 July 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம், திட்டக்குடி புவனகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட எந்த ஒரு உபகரணங்களும் வழங்காமல், இ அடங்கல் சான்றிதழை வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பு ஊதியம் அடிப்படையில் மீண்டும் பணி நியமனம் செய்வதை கண்டித்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி சிதம்பரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போராட்டக்குழு தலைவர் ராமன் தலைமை தாங்கினார். இதில் வட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், வட்டச் செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணை செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

இதேபோல் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சதிஷ், பொருளாளர் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார். புவனகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் புவனகிரி பகுதியை சேர்ந்த 24 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு, கோரிக்களை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story