கூரையுடன் கூடிய மோட்டார்சைக்கிளில் சென்று தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி தன்னார்வலர் பிரசாரம் இன்று தொடங்குகிறார்


கூரையுடன் கூடிய மோட்டார்சைக்கிளில் சென்று தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி தன்னார்வலர் பிரசாரம் இன்று தொடங்குகிறார்
x
தினத்தந்தி 3 July 2019 5:33 AM IST (Updated: 3 July 2019 5:33 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பது பற்றியும், சிக்கனத்தை வலியுறுத்தியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வலர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

புதுச்சேரி,

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இந்தநிலையில் தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பது பற்றியும், சிக்கனத்தை வலியுறுத்தியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய சட்ட தன்னார்வலர் ஆனந்தன் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

மோட்டார்சைக்கிள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள இவரது மோட்டார்சைக்கிளில் ஓலையை கொண்டு கூரை அமைத்துள்ளார். அந்த கூரை மீது விழும் நீரை எப்படி சேமிப்பது என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார். அவருடன் மேலும் 9 தன்னார்வலர்களும் இந்த பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களது விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் நமச்சிவாயம் இன்று (புதன்கிழமை) தொடங்கிவைக்கிறார்.

புதுவையில் இருந்து கிளியனூர், திண்டிவனம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை நகரம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கின்றனர். பின்னர் திருவான்மியூர், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம் வழியாக வருகிற 5-ந்தேதி புதுச்சேரி திரும்புகின்றனர்.

Next Story