என்.எல்.சி.யில் பணிபுரியும் 2 ஆயிரம் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய முடிவு தொழிற்சங்கத்தினர் தகவல்
என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேரை பணிநிரந்தரம் செய்ய நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
புதுச்சேரி,
என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை புதுவை ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது ஆண்டுக்கு 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊழியர்கள் குடியிருப்பில் 2 ஆயிரம் வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரம் நடந்தது.
பேச்சுவார்த்தை முடிந்ததும் சிறப்பு தலைவர் வீரவன்னியராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒப்பந்த தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேரை பணிநிரந்தரம் செய்ய நிர்வாக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கைகளையும் ஏற்பதாக தெரிவித்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேசி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு வீரவன்னியராஜா கூறினார்.

கூட்டத்துக்கு உதவி ஆணையர் கணேசன் தலைமை தாங்கினார். என்.எல்.சி. மனிதவள மேம்பாட்டு உதவி முதன்மை மேலாளர் உமா மகேஸ்வரன், இதர பிற்படுத்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க காப்பாளர் தீரன், சிறப்பு தலைவர் வீரவன்னியராஜா, தலைவர் வெங்கடேசன், பொதுச்செயலாளர் சிவக்குமார், பொருளாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஆண்டுக்கு 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊழியர்கள் குடியிருப்பில் 2 ஆயிரம் வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரம் நடந்தது.
பேச்சுவார்த்தை முடிந்ததும் சிறப்பு தலைவர் வீரவன்னியராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒப்பந்த தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேரை பணிநிரந்தரம் செய்ய நிர்வாக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கைகளையும் ஏற்பதாக தெரிவித்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேசி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு வீரவன்னியராஜா கூறினார்.
Related Tags :
Next Story