வானவில் : 3 மாடல் எஸ்.யு.வி.க்களை இறக்குமதி செய்கிறது ‘போக்ஸ்வேகன்’
இந்தியாவில் தற்போது எஸ்.யு.வி.க்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தற்போது எஸ்.யு.வி.க்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு உலக அளவில் பிரபலமாக உள்ள தனது 3 மாடல் எஸ்.யு.வி.க்களை இறக்குமதி செய்து விற்பனைசெய்ய போக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நிறுவனத்தின் பிரபல மாடல்களான போக்ஸ்வேகன் டிகுயான், டிராக், டிகுயான் ஆல்ஸ்பேஸ் ஆகிய மூன்று மாடல்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. டிகுயான் மாடல் 4,234 மி.மீ. நீளம் கொண்டது. டிராக் மாடல் இதைவிட 252 மி.மீ. நீளம் குறைவானது. 1.5 டி.எஸ்.ஐ., 150 ஹெச்.பி. திறன் கொண்ட என்ஜினை உடையது. இதன் விலை ரூ.23 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
டிகுயான் ஆல் ஸ்பேஸ் மாடல் எஸ்.யு.வி. மாடலில் பெரிய அளவிலானதாகும். 2017-ம் ஆண்டு டெட்ராய்டில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் இடம்பெற்று சர்வதேச அளவில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.32 லட்சம் வரை இருக்கும்.
143 ஹெச்.பி. திறனுடன் 2 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்ட இதில் 7 கியர்களைக் கொண்ட டியூயல் கிளட்ச், அனைத்து சக்கர சுழற்சி கொண்டது. பொதுவாக போக்ஸ்வேகன் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் எஸ்.யு.வி. மாடல்கள் ஏற்கனவேசந்தையில் உள்ள எஸ்.யு.வி. மாடல் கார்களுக்கு பெரும் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story