வானவில் : குழந்தைகளை கண்காணிக்க உதவும் ‘டிராக்சேப்’
அந்தக் காலங்களில் கோவில் திருவிழா சமயங்களில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் தொலைந்துவிடாமல் இருக்க குடும்பத் தலைவன் தோள் மீது குழந்தையை தூக்கி உட்கார வைத்தபடி செல்வார்கள்.
இப்போது குழந்தைகளே தனியாக நடந்து வர விரும்பும் கால மாகும். இதனால் தூரத்திலிருந்தாவது பெற்றோர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பது நல்லது.
தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 18 குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்ற செய்தி, குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு மிகுந்த கவலையளிக்கும். இதைப் போக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஜி.பி.எஸ். வசதி கொண்ட டிராக்சேப் ( Tracksafe ) எனும் சிறிய கைக்கடிகார வடிவிலான சாதனம் வந்துள்ளது. இதனை கையில் கட்டி விட்டாலே போதுமானது.
இதில் ஜி.பி.எஸ். டிராக்கிங் வசதி இருப்பதால் இருக்குமிடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். குழந்தைகள் ஆபத்தை உணர்ந்தால் இதில் உள்ள பொத்தானை அழுத்தினாலே (எஸ்.ஓ.எஸ்.) அவசர உதவிக்கு இருக்குமிடத்துக்கு சென்றுவிட முடியும். குழந்தையின் இருப்பிடத்தை அறிவதோடு, அவர்களிடம் பேசவும் முடியும்.
இதில் உள்ள பேட்டரி நீண்ட நேரம் உழைக்கும். உபயோகத்தில் இல்லாத நிலையில் 50 மணி நேரம் இது தாக்குப்பிடிக்கும். வழக்கமான உபயோகத்தில் 12 மணி நேரம் இது நீடித்திருக்கும். இதில் தேதி, நேரம் ஆகியனவும் டிஜிட்டல் முறையில் பதிவாகியிருக்கும்.
இது இரண்டு விதமானது. முதலாவது டிராக்சேப் கருவி. இதில் உள்ள ஹார்ட்வேர், உங்கள் மொபைலில் உள்ள சாப்ட்வேருடன் இணைக்கப்படும். இதன் பிறகு இதில் உள்ள ஜி.பி.எஸ். டிராக்கிங் வசதி மூலம் உங்கள் குழந்தை எங்கிருக்கிறார் என்பதை கண்காணிக்க முடியும். குழந்தைகளுக்கு தனியாகவும், செல்லப் பிராணிகளுக்கு தனியாகவும், வயதானவர்களுக்கு தனியாகவும் இந்த கருவி வந்துள்ளது. சிறிய குழந்தைகளுக்கான டிராக்சேப் விலை ரூ.2,500.
Related Tags :
Next Story