தூத்துக்குடியில் இளம்பெண் கொலை: தென்காசி கோர்ட்டில் வாலிபர் சரண்


தூத்துக்குடியில் இளம்பெண் கொலை: தென்காசி கோர்ட்டில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 4 July 2019 3:00 AM IST (Updated: 3 July 2019 9:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த இளம்பெண் கொலையில் தென்காசி கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த இளம்பெண் கொலையில் தென்காசி கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.

இளம்பெண் கொலை

தூத்துக்குடி மில்லர்புரம் பாரதி நகர் 5–வது தெருவை சேர்ந்தவர் நடேஷ் (வயது 34). இவர் உடன்குடி அருகே உள்ள கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக உள்ளார். இவருடைய மனைவி மகாராணி (28). இவர்களுக்கு 5 வயதில் விம்ரித் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் நடேஷ் வேலைக்கு சென்றுவிட்டார். மகாராணி தனது மகனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்தார். மதியம் 1 மணி அளவில் அருகே உள்ள ராஜீவ்நகரில் வசித்து வரும் மகாராணியின் தந்தை உலகமுத்து தனது மகளை பார்க்க சென்றார். அப்போது, அங்கு மகாராணி அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வாலிபர் சரண்

இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கொலை நடந்த அன்று தூத்துக்குடி அரிராம்நகர் 2–வது தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் இளவரசன் (21) என்பவர் மகாராணி வீட்டுக்கு வந்து சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் இளவரசனுக்கும், மகாராணிக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தான் மகாராணியை கொலை செய்து இருக்கக்கூடும் என்று போலீசார் கருதினர். போலீசார் இளவரசனை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனை அறிந்த இளவரசன் நேற்று காலையில் தென்காசி கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சபிதா முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

காவலில் எடுத்து...

இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் போலீசார், இளவரசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story