மாவட்ட செய்திகள்

கொத்தமங்கலத்தில் நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைக்கும் நிலையில் வரத்துவாய்க்கால் கரைகளை உடைத்து மண் கடத்தும் மர்ம நபர்கள் + "||" + Mysterious people who break the shores and transport the soil so that the youth can restore the water bodies in Kotamangalam

கொத்தமங்கலத்தில் நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைக்கும் நிலையில் வரத்துவாய்க்கால் கரைகளை உடைத்து மண் கடத்தும் மர்ம நபர்கள்

கொத்தமங்கலத்தில் நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைக்கும் நிலையில் வரத்துவாய்க்கால் கரைகளை உடைத்து மண் கடத்தும் மர்ம நபர்கள்
கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க இளைஞர்கள் சொந்த செலவில் சீரமைத்து வரும் நிலையில் வரத்துவாய்க்கால் கரைகளை உடைத்து மண்ணை கடத்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் கூறுகின்றனர்.
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய நீர்நிலைகளை பாதுகாத்து, கரைகளை பலப்படுத்தி, குளத்தை ஆழப்படுத்தி, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, மழை தண்ணீரை சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்று கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் சொந்த செலவில் கடந்த 52 நாட்களாக செய்து வருகின்றனர். இதில் அம்புலி ஆறு அணைக்கட்டு, அய்யனார் கோவில் குளம், கோடிய குளம் ஆகிய குளங்கள் சீரமைக்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சுமார் 2 ஏக்கர் சுற்றளவுள்ள பெரிய குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீரமைக்கப்படும் குளங்களில் பலவகையான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மற்ற குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


இளைஞர்களின் இந்த பணியை பார்த்து பலரும் நிதி உதவி மற்றும் பொருளாதார உதவிகள் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வருவதுடன் இளைஞர்களை பாராட்டியும் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் கரைகளை உடைத்து மண்ணை மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர். இதனால் வரத்து வாய்க்கால் கரைகள் உடைந்து காணப் படுகிறது. திடீரென மழை பெய்து வாய்க்காலில் தண்ணீர் வந்தால் இளைஞர்கள் முயற்சியில் சீரமைக்கப்பட்ட குளத்திற்கு தண்ணீர் செல்லாமல் உடைத்து கொண்டு போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மீண்டும் அந்த கரையை கட்டி சீரமைக்க பல லாரி மண் கொண்டு வந்து சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

தண்ணீர் வரத்துவாய்க்கால் கரை உடைக்கப்பட்டுள்ளதை பார்த்த இளைஞர்கள் மிகவும் மனவருந்தி உள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த சொந்த பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு வருகிறோம். ஆனால் மண்ணை கடத்தும் மர்மநபர்கள் இப்படி கரையை உடைத்துவிட்டு போகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை கடத்தும் மர்ம நபர்களை கண்டறிந்து, மீண்டும் கரையை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மறுபடியும் மண்ணை கடத்தும் மர்ம நபர்கள் மொத்த கரைகளையும் சேதப்படுத்துவார்கள் என்றனர். இளைஞர்களுடன் கைகோர்க்கவில்லை என்றாலும் அவர் களின் செயலுக்கு தடங்கலாக இருக்கலாமா? என்றும் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓ.என்.ஜி.சி. நிறுவத்தினர் குழாய் சீரமைக்கும் பணியை கண்டித்து 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி
கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் குழாய் சீரமைக்கும் பணியை கண்டித்து 3 கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனர்.
2. பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதட்டிய விசைப்படகு பொக்லின் எந்திரங்கள் மூலம் மீட்பு
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதட்டிய விசைப்படகு பொக்லின் எந்திரங்கள் மூலம் மீட்கப்பட்டது.
3. தஞ்சையில், 2-வது நாளாக போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு 736 பேர் தகுதி
தஞ்சையில் 2-வது நாளாக போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு 736 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
4. சுற்றுச்சுழல் துறை சார்பில் தூய்மை பணி அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்
புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் நேற்று காலை கடற்கரை சாலையில் தூய்மை பணி நடந்தது. இதனை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
5. ரூ.17 கோடியில் நடந்து வரும் திருச்சி சத்திரம் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்
ரூ.17 கோடியில் நடந்து வரும் திருச்சி சத்திரம் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று ஆய்வுக்கு பிறகு அதிகாரி தெரிவித்தார்.