தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2019 4:00 AM IST (Updated: 4 July 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் அன்பழகன், பொருளாளர் செந்தில், துணைத் தலைவர் முத்தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்களாக, ஓய்வுப்பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணி நியமனம் செய்யகூடாது. தொகுப்பூதியத்தில் வருவாய்த்துறையில் எம்.பி.ஏ. படித்தவர்களை பணியாளர்களாக நியமனம் செய்யக்கூடாது. துணை கலெக்டர் அந்தஸ்திலான பணியிடங்களை குறைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேகோரிக்கையை வலியுறுத்தி, கரூர், மண்மங்கலம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story