மேலூர்-பிள்ளையார்பட்டி வழித்தடத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலை; கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல்
மேலூர்-பிள்ளையார்பட்டி வழித்தடத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
காரைக்குடி,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்டது. தரமான சாலை என எல்லோராலும் பாராட்டப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக ஒரு குறை இருந்து வந்தது. அதாவது கீரனூர் அருகே உள்ள மேம்பாலம் சில காரணங்களுக்காக பணி முடிவடையாமல் இருந்தது. இதுபொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. இந்த இடையூறுகளை தொடர்ந்து மேம்பால பணியை பூர்த்தி செய்ய வேண்டும் என முயற்சி எடுத்து வந்தோம்.
அதன் பலனாக தற்போது பாலம் பணியை முடிக்க புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதனையொட்டி பணி விரைவில் தொடங்க உள்ளது. மேலும் மேலூர் - பிள்ளையார்பட்டி வழி தடத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story