109 கண்மாய்களில் குடிமராமத்து பணி அரசு கூடுதல் செயலர் விவசாயிகளுடன் ஆலோசனை


109 கண்மாய்களில் குடிமராமத்து பணி அரசு கூடுதல் செயலர் விவசாயிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 109 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக அரசு கூடுதல் செயலர் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 109 கண்மாய்கள் ரூ.39 கோடியே 22 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி, சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர், ஓக்கூர், பொய்யலூர், செஞ்சை மறவமங்கலம், செம்பனூர் மற்றும் திருப்புவனம் ஆகிய கிராமங்களில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய்கள் நீர்பாசன சங்க விவசாயிகளால் சீரமைக்கப்பட உள்ளன.

இந்த கிராமங்களுக்கு சென்ற அரசு கூடுதல் செயலர் அந்தந்த பகுதி விவசாயிகளுடன் தரையில் அமர்ந்து குடிமராமத்து திட்டத்தில் பணிகள் எப்படி செய்வது என்றுஆலோசனை நடத்தினார். முன்னதாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story