மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வந்தனர் + "||" + Nagercoil people come from Kashmir to raise awareness about sexual violence

நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வந்தனர்

நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வந்தனர்
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாலியல் வன்முறைக்கு எதிராக நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி,

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் அரவிந்த் (வயது 27), தவ்பிக் (22), ராஜேஷ் (28), அருண் (20), ரோஷன் (20), ஜோசப் (21). இவர்கள் 6 பேரும் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பாலியல் வன்முறையை தடுக்கக் கோரியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.


அதன்படி கடந்த 19-ந் தேதி காஷ்மீரில் இருந்து விழிப்புணர்வு பிரசாரத்தை மோட்டார் சைக்கிளில் தொடங்கினர். அரியானா, டில்லி, பஞ்சாப் உள்பட 12 மாநிலங்கள் வழியாக சுமார் 6 ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தூரத்தை 14 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து நேற்று தங்களது பிரசாரத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்தனர்.

பாலியல் வன்முறைக்கு எதிராக

இந்த விழிப்புணர்வு பிரசாரம் குறித்து அவர்கள் கூறுகையில், நாட்டின் 12 மாநில பகுதிகள் வழியாக மோட்டார் சைக்கிளில் நாளொன்றுக்கு 400 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தோம். வரும் வழியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தோம். சொந்த செலவில் இந்த பயணத்தை மேற்கொண்டோம். எதிர்காலத்திலும் இதுபோன்ற விழிப்புணர்வு பயணங்களை தொடர உள்ளோம் என்றனர்.