நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி; பாசிக் ஊழியர்கள் 134 பேர் கைது
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற பாசிக் ஊழியர்கள் 134 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 57 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களாக 480 நாட்கள் பணி செய்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 26-ந் தேதி முதல் பாசிக் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே கூடினர். அங்கிருந்து தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
ஊர்வலத்திற்கு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல்தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா மற்றும் பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் காமராஜர் சாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி சென்றது. லூயிஸ் வீதி அருகே வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி அவர்கள் செல்ல முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இதில் 25 பெண்கள் உள்பட 134 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story