ராஜ்பவன் தொகுதி பணிகளை விரைவாக முடிக்கவேண்டும் - நாராயணசாமி உத்தரவு
ராஜ்பவன் தொகுதி பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
புதுவை சபாநாயகரான வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரான லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. தனக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்த பதவி கிடைக்காமல் போகவே அவர் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்களும் ஆத்திரம் அடைந்தனர்.
சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. பயன்படுத்தி வந்த காரையும் சட்டசபையில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வை சமரசப்படுத்தும் முயற்சிகளும் நடந்தன. இதன் காரணமாக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஓரளவு சமாதானம் அடைந்தார்.
இருந்தபோதிலும் அவரது தொகுதியான ராஜ்பவனில் திட்டப்பணிகள் சரிவர நடைபெறாமல் இருந்து வந்தன. குறி்ப்பாக குமரகுருபள்ளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டுதல், கோவில் நில பிரச்சினை, பள்ளிக்கூட கட்டிட பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலுவையில் இருந்தன.
இதுதொடர்பான பிரச்சினைகளை குறிப்பிட்டு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடித்தில், சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பு தனது தொகுதி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் தொகுதி மக்களுடன் தெருவில் இறங்கி போராடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட அதிகாரிகள் கூட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டினார். கூட்டத்துக்கு வருமாறு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வுக்கும் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், அரசு செயலாளர்கள் ஜவகர், அபிஜித் விஜய் சவுத்ரி, பார்த்திபன், அசோக்குமார் உள்பட பல்வேறு துறை இயக்குனர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் ராஜ்பவன் தொகுதி பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவி்ட்டார்.

Related Tags :
Next Story