அணையை கட்டிய சிவசேனா எம்.எல்.ஏ. மீது வழக்கு : எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்


அணையை கட்டிய சிவசேனா எம்.எல்.ஏ. மீது வழக்கு : எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 July 2019 5:30 AM IST (Updated: 4 July 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பை,

ரத்னகிரி மாவட்டத்தில் திவாரே அணை உடைந்ததில் அப்பாவி கிராம மக்கள் பலர் பலியாகி உள்ளனர். இந்த அணையை கெம்ராஜ் என்ற நிறுவனம் கட்டியது. இது சிவசேனாவை சேர்ந்த சதானந்த் சவான் எம்.எல்.ஏ. நடத்தி வரும் கட்டுமான நிறுவனம் ஆகும். 

கட்டப்பட்ட குறுகிய காலத்திலேயே அணையில் உடைப்பு ஏற்பட்டு இருப்பது, கட்டுமானம் சரியில்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. எனவே சதானந்த் சவான் எம்.எல்.ஏ. மீது மரணத்தை விளைவிக்கும் குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் அணையில் நீர் கசிவு ஏற்பட்டதை பொதுமக்கள் மனுவாக அளித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி உள்ளனர். இதனால் அரசு மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story