பள்ளி மாணவ - மாணவிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மடிக்கணினி வழங்கப்படும் கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
பள்ளி மாணவ - மாணவிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் 2019-20-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவிகளுக்கும், 2018-19-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு மற்றும் 2017-18-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த மாணவ - மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
அரசாணையின்படி விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்கு முதல் முன்னுரிமை 2019-20-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவிகளுக்கும், இரண்டாவது முன்னுரிமை இதே கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து மூன்றாவது முன்னுரிமையாக 2018-19-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பயின்றவர்களுக்கும், 4-வது முன்னுரிமையாக 2017-18-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே அரசு மற்றும் நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மற்றும் படித்து முடித்த அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். இதுபற்றி மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story