ஓட்டல்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம்
ஓட்டல்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடந்தது.
மன்னார்குடி,
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மன்னார்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின்படி 100 கிலோவுக்கும் மேலாக கழிவுகளை வெளியேற்றும் வியாபார நிறுவனத்தினர் தங்களுடைய சொந்த பொறுப்பில் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் அல்லது உரமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உரிமையாளர்கள்
கூட்டத்தில் நகர்நல அலுவலர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி நகராட்சி பகுதியை சேர்ந்த திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் 19 பேர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story